குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கமராவின் எதிரில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு ஐக்கிய தேசிய முன்னணியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சுத் தொடர்பிலான பிரச்சினைகள் ஏதேனும் காணப்பட்டால் அவை ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படாது தீர்த்துக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயக் குழுவும் அமைச்சரும் இந்தப் பிரச்சினையை கமராவிற்கு எதிரில் தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்கக் கூடாது எனவும், ஊடகங்களின் முன்னணிலையில் வாதப் பிரதிவாதம் செய்வது பயனற்றது எனவும் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் முன்னிலையில் ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சித்த போது, சில உறுப்பினர்கள் அறிக்கையில் கைச்சாத்திடவில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.