குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காம்பியாவின் தேர்தல் ஆணையாளர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற தேர்தலில் காம்பியாவின் ஜனாதிபதி Yahya Jammeh தோல்வியடைந்தார் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இவ்வாறு தேர்தல் ஆணையாளர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தீர்மானித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் Alieu Momar Njai கடந்த ஜனாதிபதி தேர்தலில் Adama Barrow வெற்றியீட்டியதாக அறிவித்திருந்தார். முன்னதாக தேர்தல் தோல்வியை ஓப்புக் கொண்ட ஜனாதிபதி Yahya Jammeh பின்னர் ஆட்சியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.