பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி இலகு வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்தின் நேபியரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஸ் வெற்றியீட்டி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில், முஹமுதல்லா 50 ஓட்டங்களையும், மொசாடிக் ஹூசெய்ன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணியின் சார்பில் லொக்கீ பெர்கசன் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கினை எட்டியது. இதில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், கொலின் கிரான்ட்ஹோம் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் சகிபுல் ஹசன், முஸ்டாபிர் ரஹ்மான் மற்றும் ருபெல் ஹூசெய்ன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தியிருந்தனர்.