துருக்கியில் அவசரகாலச் சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த யூலை மாதம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதுடன் அவ் வேளையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் அதிகமானோர் காயமடைந்துமிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு 3 மாதங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டம் கடந்த ஒக்ரோபர் மாதம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிரதமர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் புரட்சிக்கு சதி திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ துணை தளபதிகள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடர்ந்துவரும் நிலையில் இதற்கு வசதியாகவே அவசரகாச் சட்டம் மேலும் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.