குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டு நீதவான்கள் குறித்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதவான்கள் குறித்த பரிந்துரைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வெளிநாட்டு நீதவான்களை பங்குப்பற்றச் செய்வது குறித்த யோசனைகளை எவரும் முன்வைக்க முடியும் என்ற போதிலும் அரசாங்கமே தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறைமை குறித்த விசேட செயலணியின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கலப்பு நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு ரீதியான பொறிமுறைமையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.