153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நிலை குறித்து சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் சில இணைய ஊடகங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நிலை மோசமமைடந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ரத்து செய்த காரணத்தினால் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Spread the love