164
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் சஞ்சய் பாண்டே அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற மீனவர் பேச்சுவாரத்தையில் கலந்துகொள்ள வந்திருந்த குறித்த குழுவினர் யாழ். சென்று கீரிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டதுடன் இந்திய அரசினால் அண்மையில் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பார்வையிட்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் இரண்டு பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
Spread the love