171
விவசாயிகள் தொடர் மரணம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் மரணம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக தலைமை செயலாளாருக்கு உத்தரவிட்டுள்ளது.
Spread the love