குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமற்றது என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ விசாரணைகளுக்காக வரும் வெளிநாட்டு நீதவான்களை அனுமதிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறைமை குறித்த செயலணியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறைமை பற்றி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனினும் வெளிநாட்டு நீதவான்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதவான்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற அரசாங்கத்தின் திடமான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையில் அரசியல் சாசனத்திலும் வெளிநாட்டு நீதவான்களுக்கான இடமில்லை எனவும், உலகின் எந்தவொரு நாட்டினதும் நீதவான்களுக்கு நிகரான நீதவான்கள் இலங்கையில் இருப்பதாகவும் எனவே, இலங்கை நீதவான்களை இழிவுபடுத்த தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.