ரூபாய் தாள் விவகாரத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுத்தியுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஏழைகள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை எதிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி இது தவிர்க்க முடியாததுதான் என்ற போதிலும் உள்நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளஎன எனவும் இருப்பினும் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.