இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, வீட்டுக் கடன் வட்டியை 0.45 சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ளது. இதேபோல் ஹெசிஎப்சி உள்ளிட்ட வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
இந்திய பிரதமர் மோடி தனது புத்தாண்டு உரையின் போது வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து கடனுக்கான வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ. வங்கி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வட்டி விகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்துள்ள அதேவேளை பஞ்சாப் நஷனல் வங்கி, வட்டி விகிதத்தை 8.20 சதவீதமாக குறைத்துள்ளது.
இதைதொடர்ந்து, தற்போது ஹெச்டிஎப்சி மற்றும் பாங்க் ஒஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. எச்டிஎப்சி வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவிகிதம் வரை குறைத்துள்ளது.இந்த வட்டி விகிதக் குறைப்பு ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து வீட்டுக்கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவு குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.