204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் தாயும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமந்த குமார எனப்படும் வெலே சுதாவின் தாயும் சகோதரர் ஒருவரும் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 20 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெலே சுதாவிற்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love