151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் கட்சி பேதமின்றி விமர்சனங்கள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும் இந்த அரசாங்கம் மக்களின் அரசாங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தரமான ஓர் அபிவிருத்தியை நோக்கி நாட்டை நகர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் விரைவில் கலைக்கப்படும் என சிலர் எதிர்பார்ப்பதாகவும் உண்மையில் அவ்வாறு நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love