குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பது யதார்த்தமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முதலீட்டு உடன்படிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்க சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன – பிரதமர்
169
Spread the love