குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறிமுறையானது கலப்பு நீதிமன்ற பொறிமுறைமையாக அமைய வேண்டியதில்லை என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றமொன்று அவசியமில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் எவ்வாறான கருத்தை வெளியிட்டாலும் எவ்வாறு பேசினாலும் ஜனாதிபதியின் திடமான நிலைப்பாட்டில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைமையின் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கையுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு மிகத் தெளிவான நிலைப்பாடு காணப்படுகின்றது எனவும் சில நபர்கள் சில அமைப்புக்களுக்கு சர்வதேச நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்றின் அவசியம் இருந்த போதிலும் ஜனாதிபதிக்கு அவ்வாறு எவ்வித அவசியமும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.