குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதன்படி நேற்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவி வரும் வரட்சியினால் அரிசியின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதனால் பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு சுங்க வரி, துறைமு,விமான வரி, வற்வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி, விசேட பொருட்கள் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வந்துள்ள போதிலும் , உள்நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துக் காணப்படுவதனால் விசேட பொருட்களுக்கான 15 ரூபா வரியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வரி அறவீடுகளையும் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.