244
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் பெறுமதியான காணிகளையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விற்பனை செய்திருந்தார் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். காலி முகத் திடலுக்கு அருகாமையில் உள்ள இலங்கையின் மிக முக்கியமான காணியை மஹிந்த விற்பனை செய்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் மொனராகல் பகுதியில் சுமார் 50000 ஏக்கர் காணி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை தேவை என்றால் மொனராகல் மாவட்டத்திற்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love