குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு வட்டாரத் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு சட்ட ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் அறிக்கையில் கையொப்பமிட்டதன் பின்னர் அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை என்ற காரணத்திற்காக அமைச்சர் அறிக்கையை ஏற்றுக்கொள்வதனை நிராகரித்திருந்தார். இந்த அறிக்கையில் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி மட்டும் கையொப்பமிடமில்லை என அவர் தெரிவிக்கப்படுகிறது.