குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன இலங்கை உறவுகளை தீய சக்திகளினால் பிரிக்க முடியாது என இலங்கைத் தூதுவர் சீனத்தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகளை எந்தவொரு தீய சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகளவு சீன முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் தெற்கு பொருளாதார வலயத்தில் சீனா 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக சுமார் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான ஓர் பின்னணியில் பாதகமான சக்திகளினால் உதவிகளை தடுக்க அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சீனாவின் மிகுந்த நட்பு நாடுகளில் ஒன்று எனவும், இதன் காரணமாகவே சீனா இலங்கைக்கு கூடுதல் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.