குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் நீதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து லசந்த இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
லசந்தவின் நினைவு நிகழ்வுகள் இன்று பொரளை கனத்தை பொது மயானத்தில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அருகாமையில் நடத்தப்பட உள்ளது. மிக நீண்ட காலமாக லசந்த கொலை குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் கொலை வழக்கு விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது எனினும் இதுவரையில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.