குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முற்பது ஆண்டுகளாக மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் கடமையாற்றியிருப்பதாகவும் இணைந்து செயற்படுவது கடினமானதல்ல எனவும் தெரிவித்துள்ள அவர் புதிய கட்சிகள் உருவாக்கப்படுதல் புதிய கட்சிகளில் இணைதல் போன்றவற்றை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மக்களின் தேவைகளை கட்சி புரிந்து கொண்டு செயற்படுதல் மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ள மகிந்த இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், அவ்வாறு குற்றம் சுமத்துவதே ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்தும் செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.