இந்தியாவுக்கு எதிரான ஆவணம் ஒன்றை பாகிஸ்தான் ஐநாவிடம் ஒப்படைத்துள்ளது. குறித்த ஆவணத்தை ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி ஐ.நாவின் புதிய பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரஸை நேரடியாக சந்தித்து ஒப்படைத்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வழங்கிய கடிதமும் குட்டரஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பலுசிஸ்தான், தன்னாட்சி பகுதிகள், கராச்சி ஆகிய இடங்களில் நடக்கிற பயங்கரவாத செயல்களில் இந்தியாவின் குறிப்பாக றோவின் தலையீடு இருப்பதற்கான கூடுதல் தகவல்கள், ஆதாரம் என்ப ஐ.நா. பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே ஐ.நா. சபையிடம் இது போன்று வழங்கப்பட்ட 3 ஆவணங்களின் தொடர்ச்சியே இது எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.