குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கங்கள் தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பினருடன் இணைந்து புதிதாக அரசாங்கம் அமைக்க வேண்டியதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
எதிர்கால ஆட்சி தொடர்பில் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் கருத்து வெளியிட்டு வருவதாகவும் இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி செய்வதனை விமர்சனம் செய்யக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் எந்தவொரு அரச தலைவராவது ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தேர்தல் நடத்துவாரா எனவும் கடந்த அரசாங்கம் ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலையிலேயே தேர்தலை நடத்தியதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி கடன் சுமை மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஈடு செய்ய முடியாது ஆட்சியை விட்டு விட்டு தப்பியோடியவர்கள் இன்று அரசாங்கத்தை விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.