குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன அபிவிருத்தித் திட்டங்களை பொனலறுவைக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு இரண்டாண்டுக்ள பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்பட்டால் அந்த திட்டத்தை பொலனறுவைக்கு வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பொலனறுவையில் காணிகளை வழங்க தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.