சுமார் 24000 சைபர் தாக்குதல்களை பிரான்ஸ் அரசாங்கம் முறிடியத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பிரான்ஸின் முக்கிய பாதுகாப்பு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான சுமார் 24000 தாக்குதல் முயற்சிகளை தோற்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்வதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக பிரான்ஸின் முக்கிய நிலைகள் மீதான சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.