கொலம்பியாவின் பார்க் கெரில்லாக்களுடன் விருந்துபசாரத்தில் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அண்மையில் புத்தாண்டை முன்னிட்டு பார்க் கெரில்லாக்கள் நடத்திய விருந்துபசாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விருந்துபசாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும், பெருத்தமற்ற வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலம்பிய பார்க் கெரில்லாக்களுடன் இணைந்து விருந்துபசாரத்தில் பங்கேற்ற நான்கு கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே பணி நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பித்துள்ளது.