134
ஒரு குடும்பத்திற்கு எதிராக செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்ட மூலமானது ஒரு குடும்பத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரின் குடியுரிமைகள் பறிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love