எந்தவொரு நிகழ்விற்கும் அழைப்பு விடுக்கப்படுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றுக் கொண்டு இரண்டாண்டுகள் பூர்த்தியாகும் நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ஜனநாயக விரோதமான வகையில் அரசாங்கம் தாக்குதல் நடத்தியதாக, கண்டியில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்..