அரசியிலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் மீதான அதிருப்தியே இவ்வாறு அரசியலிலிருந்து விலகக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.
அரசியல்வாதிகள் தங்களது நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் அதேவேளை மக்களைப் பற்றி கவனத்திற் கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தைக் கொண்டு தாம் சீவிப்பதில்லை எனவும், அந்தப் பணத்தை புலமைப் பரிசில்கள் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் பிழைப்பு நடத்த வேண்டாம் என தமது தந்தை ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பணத்திற்காகவும் வேறும் தேவைகளுக்காகவும் பக்கம் மாறுவது தமது கொள்கையல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.