திருகோணமலை மாவட்டத்தில் 30 வருடங்கள் கடந்தும் குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படாமல் இருந்தவர்களுக்கான உறுதிகள் இன்று காலை வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியபதி கலபதி தலைமையில் திருகோணமலை குளக்கோட்டன் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு பட்டினமும் சூழலும் பிரதேச சபை,தம்பலகாமம் பிரதேசசபை ஆகிய எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் 130பேர்களுக்கான காணி உறுதிகளை வழங்கிவைத்தார்.
இதன்போது அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதுடன் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டு உறுதிகளைப் பெற்றுக்கொண்டனர்.