159
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பிணை முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட உள்ளது. பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த விவாதம் எதிர்வரும் 24ம் திகதியளவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தியினால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மோசடியுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love