குளோபல் தமிழ்ச் செய்தியாளர்,
சிரிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என ஜனாதிபதி பசார் அல் அசாட் தெரிவித்துள்ளார். ரஸ்யா மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் கஸகஸ்தானின் அஸ்டானாவில் விரைவில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எதிர்த்தரப்பில் யார் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் இருப்பதாகவும் யார் எதிர்த்தரப்பினை பிரதிநிதித்துவம் செய்வார்கள் என்பது தமக்கு இதுவரையில் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அரசாங்கத்தின் தரப்பில் சில பிழைகள் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என துருக்கி தெரிவித்துள்ளது.