குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புலமைச் சொத்துக்கள் கொள்ளையிடப்படுவது தடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைச் சொத்து கொள்ளைக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி புலமைச் சொத்துக்கள் தொடர்பிலான சட்டங்களை அமுல்படுத்துமாறும் அவற்றில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கலைஞர்கள் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலமைச் சொத்து மற்றும் பதிப்புரிமை ஆகியன தொடர்பிலான சட்டங்களை அமுல்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.