குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால், கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை, எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் கட்டடத்துக்கு முன்னால் கூட்டு எதிரணியின் ஆதரவாளர்கள் சிலர் கூடியிருந்ததன் காரணமாக அங்கு ஒரு பதட்டமான சூழநிலை நிலவியதான தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு2 – விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்
Jan 10, 2017 @ 11:27
ஜே.என்.பி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக விமல் வீரவன்ச இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிவிற்கு சென்றிருந்தார்.
அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமை குறித்து விமல் வீரவன்சவிடம் விசாரணை நடத்தியதன் பின்னர், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை:
Jan 10, 2017 @ 09:40
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்க வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.