குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வில்பத்து காடு அழிக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டில் வனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்ட போது அதன் பூர்வீக குடியிருப்பாளர்கள் புத்தளத்தில் உள்ள இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வந்தனர் எனவும் 22 ஆண்டுகளின் பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அந்தக் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணிகள் சுவீகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் இதனால் பூர்வீக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளமை மக்களுக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கக் கடத்தல்களுடன் தம்மையும் தமது சகோதரர் ஒருவரையும் தொடர்புடுத்தி வெளியிடப்பட்ட செய்திகள் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.