178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலைகழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. நாளையும் பட்டமளிப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இவ்வருடம் 2151 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். இவர்களில் 164 மாணவர்கள் பட்டப் பின் தகைமை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுவதுடன், 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
வவுனியா வளாகத்திலிருந்து 196 உள்ளக மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதுடன் 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம் பெறவுள்ளனர். இதேவேளை 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம் பெறவுள்ளனர்.
இதன்பிரகாரம் முதல் நாள் முதல் அமர்வானது இன்று காலை 9 மணிக்கும், 10.30 மணிக்கும், 11.30 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும், 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளன. இதேபோன்று இரண்டாம் நாள் அமர்வானது நாளை காலை 9 மணிக்கும், 10.30 மணிக்கும், பிற்பகல் 1.30 மணிக்கும், 3 மணிக்கும் நடைபெறவுள்ளது.
Spread the love