164
சர்வதேச கால்பந்து சம்மேளனம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிககை 32இலிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக அணிகளை பங்கேற்க செய்யும் விதமாக 16 குழுக்கள் செயல்படுவதுடன் ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறும்.
மேலம் உலக கோப்பை அணிகள் பட்டியலில் உருவாக்கப்படும் கூடுதல் இடங்கள் பெரும்பாலும் ஆசிய , ஆப்ரிக்கா நாடுகளுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Spread the love