குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாயந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிச் சென்றாலும், கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு தரப்பினர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சு பதவி வழங்கப்படா விட்டாலும் பிரதி அமைச்சர் பதவி வழங்கினாலும் போதும் என்ற நிலையில் இந்த உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சனம் செய்து வரும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.