குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவில் ஜனாதிபதியை பதவி கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவின் தேசிய பேரவை எதிர்க்கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் காணப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ (Nicolas Maduro ) பதவியை கைவிட்டுச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன.
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை போதிலும் எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியை பதவி கவிழ்ப்பதற்கான அதிகாரம் தேசியப் பேரவைக்கு கிடையாது என ஏற்கனவே அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.