கொலையுண்ட பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் எலும்புப் பகுதிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. மரபணு குறித்த அறிக்கை விரைவில் கிடைக்கும் என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன் பிணை வழங்குமாறு கோரி முன்னாள் சட்ட வைத்தி அதிகாரி ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த மனு, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் சார்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க ஆஜராகியிருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தாஜூடீனின் எலும்புகள் என சந்தேகிக்கப்படும் சில எலும்புகள் உள்ளிட்ட உடற் பாகங்கள் அண்மையில் மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.