148
பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமாக சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார்.
இச்சநதிப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love