163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரொமானிய டென்னிஸ் வீரர் ஒருவருக்கு ஆயுட்கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ரொமானிய டென்னிஸ் வீரர் அலெக்ஸ்சான்ரு டானியல் கார்ப்பன் என்பவருக்கே (Alexandru-Daniel Carpen) இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயதான அலெக்ஸ்சான்ரு டென்னிஸ் போட்டி ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாம் குற்றச் செயலில் ஈடுபட்டதாக கடந்த 2015ம் ஆண்டில் அலெக்ஸ்சான்ரு ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love