குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டொனால்ட் ட்ராம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது. ரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தவே இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எந்த வகையிலும் ரஸ்யா தலையீடு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ரஸ்யா டொனால்ட் ட்ராம்பிற்கு ஆதரவான வகையில் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சுமத்தியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் Dmitry Peskovதெரிவித்துள்ளார்.