குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை முஸ்லிம் பேரவையின் பிரதிநிதிகள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக சிங்கள-பௌத்த கடும்போக்குவாதிகள் சிலரால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வன்முறைகள் மற்றும் அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீளமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்கா பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அமெரிக்க தூதுவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.