203
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும்; நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Spread the love