குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கா போலந்தில் இராணுவத்தை குவித்துள்ளமை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ரஸ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்கா போலந்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை குவித்துள்ளது.
அமெரிக்கப் படையினர் போலந்தின் Olszyna எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில தசாப்தங்களில் ஐரோப்பாவில் அமெரிக்கப் படையினர் பாரியளவில் நிலைநிறுத்தப்படும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
மூன்றாம் நாடு ஒன்று தமது எல்லைப் பகுதியில் பாரிளவில் இராணுவத்தை குவிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.