குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வறட்சி நிவாரணங்களை வழங்க முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவாரணங்களை வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்றைய தினம் நடைபெற்ற பயிலுனர் படையினர் பயிற்சி பெற்று செல்லும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதவற்கு அரசாங்கம் திட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் படைச் சேனாதிபதி என்ற ரீதியில் இதனை வரவேற்பதாகவும் முப்படையினர் மீது முழு அளவில் நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.