180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் சீன கடற்பரப்பு விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவுகளுக்கு பிரவேசிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையே இதற்கான காரணமாகும்.
தென் சீன கடற்பரப்பில் காணப்படும் தீவுகளுக்கு சீனா பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என அமெரிக்க ராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட உள்ள றெக்ஸ் ரில்லர்சன் (Rex Tillerson ) தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு சீனாவின் தேசிய ஊடகங்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளன. முரண்பாடுகளை வலுக்கச் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என சீனா கோரியுள்ளது.
Spread the love