குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப் பெறும் என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்ததுடன், பிரதமர் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களும் இது பற்றி கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனினும், இலங்கைக்கு வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்து இன்னமும் ஐரோப்பிய ஒன்றியம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு வரிச் சலுகைத் திட்டத்தை வழங்க முடியும் என ஐரோப்பிய ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.
இலங்கைக்கு வரிச் சலுகை வழங்குவது குறித்து ஐரோப்பிய பாராளுமன்றமும், ஆணைக்குழுவும் தீர்மானம் எடுக்க உள்ள நிலையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் அளவிலேயே தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.