குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் உருவாக்குவது கால தாமதமடையக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு இல்லாமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இணக்கப்பாடு இன்மையினால் இந்த அரசியல் சாசனப் பேரவையின் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்து பாராளுமன்றிற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ளது.
எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தபபட வேண்டிய விடயங்கள் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளது. கடந்த 9, 10 மற்றும் 11ம் திகதிகளில் அரசியல் சாசனப் பேரவையின் அமர்வுகள் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.